• stantonheader.jpg
  • rudolfsheimbanner.jpg
  • neu5hausbanner.JPG
  • schoenbrunnvorparkaussen.jpg
  • Hauptbanner.jpg
  • schoenbrunninnen.jpg
  • rudolfsheim.jpg

அன்பின் பாதை 

திருச்சிலுவைப் பாதை தொடக்க செபம் 

முதல்வர்: தந்தை மகன் தூய பெயராலே, ஆமென்!

எல்லோரும்: இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன்இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள்நினைவுகூர்கின்றோம். அவர்நடந்துசென்ற சிலுவையின்பாதையில் பின்சென்று நடந்திட. இறுதிவரை இயேசுவின் நாங்கள்வாழ மன்றாடுகின்றோம் மன்றாடுகின்றோம் மன்றாடுகின்றோம். ஆமென்!

 சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம் :   

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை செய்துவிட்டேன். ஆகவேநான் குற்றங்கள் செய்தேன் எனவும், நன்மைகள் பாவம் வருந்துகிறேன் வருந்துகிறேன், இனிமேல் பாவம் திரும்பி திரும்பி, இனிமேல் பாவம் என்றும், பாவத்துக்கு பாவம் என்றும், பாவத்துக்கு ஏதுவான பயனாக., இறைவா என்மேல் என்மேல்.

திவ்விய இயேசுவே! வைப் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலு, உம் இரக்கத்தைக் கெஞ்சி விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி.

புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் அவரோடு உடனிருந்து, அவருடைய பாடுகளில் போல, நாங்களும் எங்கள் போல போல, நாங்களும் பாடுகளில் போல போல போல போல.

 

முன்னுரை

இறை யேசுவில் அன்புக்குரியவர்களே, தவக்காலத்தின் வெள்ளிக்கிழமையில் நாம் இன்று இருக்கிறோம், தவக்காலத்தின் முக்கிய நிகழ்வானசிலுவைப்பாதை வழிபாட்டை துவங்குகின்றோம். இம்மானிடம் மீட்புபெற தன்னையே தந்தை இறைவனுக்கு தகனபலியாக தந்த நம் ஆண்டவர்இயேசுவின் அன்பின் பாதையில் பயணிக்கயிருக்கின்றோம். அன்பே உருவான இறைவன் கன்னிமரியின் திருவயிற்றில் மனிதனாக உருவாகிஇம்மண்ணில் பிறந்து அன்புக்கு சான்று பகர்ந்தார், ஏழை எளியவர்களுக்கு தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து அவர்களின் விடுதலைக்காகஉழைத்தார். உன்னை அன்பு செய்வதைப்போல உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வாயாக என்று அறைகூவல் விடுத்தார். அன்பில்தான் புதியசமத்துவ சமூகம் அமைக்க இயலும் என தன் புனித வாழ்வால் மெய்பித்தார். இன்றைய உலகம் இயேசு காட்டிய அன்பு வாழ்வை மறந்து சுயநலத்தில்விழுந்து சொல்லன்னா துன்பத்தில் வாடுகிறது, அதற்கு நீங்களும் நானும் சாட்சிகள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், மொழியின்வெறுப்புணர்வால், ஏழை பணக்காரர் ஏற்றத்தாழ்வு, தேசப்பிரிவுகளால் வேறுபாடு, ஆண் பெண் உறவுகளில் உரசல், குடுமபத்தில் விரிசல் எனஎண்ணற்ற பிரச்சனைகளை நாளும் சந்திக்கின்றோம். இத்தனை முரண்பாடுகளும் அன்பற்ற வாழ்வினால் நிகழ்ந்தது ஊரும் உலகமும் அறியும்.இவற்றை நாம் களைய வேண்டாமா வாருங்கள் இயேசுவின் அன்பின் பாதை வழி நடப்போம்.

 

முதல் நிலை அன்புக்கு தண்டனை

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

 

இவ்வுலகை ஒரே சொல்லால் படைத்த இறைவன் தன்னால் படைக்கப்பட்ட மனிதனின் முன்னால் நீதி தீர்ப்புக்காக குற்ற்றவாளி கூண்டில்நிறுத்தப்படுகிறார். பிலாத்து மனசாட்சியை முழுவதும் மழுங்கடித்த மனிதன், தன் மனைவியின் மூலமாக அதை புதுபிக்க வாய்ப்புக் கிடைத்தும், தன்பதவிக்காக அதை தவறவிட்ட ஒருவன். இயேசு சாவுக்குரியவன், எனவே உரோமையர்களின் உச்சபச்ச தண்டனையான அவமான சிலுவை சாவுவழங்கப்பட வேண்டும் என்று யூத சங்கம் முழுமையும் முயற்சித்தது, வறியவரின் குரலான இயேசுவை கொன்று எளியவரின் வாழ்வை இருளுக்குள்தள்ள மொத்த அதிகார வர்க்கமும் எத்தனித்தது. சாவுக்காக இயேசு ஒருபோதும் அச்சமடையவில்லை ஆனால் அன்பு வாழ்வுக்கு கல்லறை கட்டவேண்டும் என்ற அவர்களின் செயல் அவரை மிகவும் வருத்தியது. பதவிக்காக நீதியை கொன்று இயேசு சிலுவை சாவுக்குரியவர் என்ற தீர்ப்புஎழுதினான் பிலாத்து.

பிலாத்து மறைந்தாலும், இன்றும் நீதியை கொல்லும் பிலாத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவற்றை வாய்மூடி மவுனியாக வெறும்பார்வையாளர்களாக வாழும் நாமும் பிலாத்துக்கள் என்பதை மறக்கவேண்டும். நீதி ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் தூக்கு மேடைஏற்றப்படுகிறது, அநியாயமாக சாதாரண மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது அறைகூவல் என்ன? ஏழைகளுக்காக நமது மனம்இறங்குகிறதா ? குடும்பங்களில் எவ்வாறு நீதி வாழ்கிறது ? இயேசுவின் சிலுவை மரணத்துக்காக கலங்கும் நாம், அநியாயமாகதண்டிக்கப்படுவோருக்காக குரல் கொடுத்திருகின்றோமா? இல்லை அவர்களுக்காக ஆதங்கபட்டிருகின்றோமா? சிந்திப்போம்

செபம்

அன்பே உருவான இறைவா! எம்மில் மனிதம் மலர்ந்திட நீர் காட்டிய அன்பு வாழ்வில் நாங்கள் என்றும் நடந்து உலகில் நீதியை நிலை நாட்ட வரம்தாரும் ஆமென்.

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

அ. – ஆமென்

 

 

இரண்டாம் நிலைஅன்பின் தோளில் உலகம்

தன்னையே இறைவனின் மகன் என்று சொல்லிக்கொண்டு இறைவனுக்கு இழுக்கு சேர்த்தவன் என்ற குற்றசாட்டுக்கு ஆளாகி சிலுவைமரணதண்டனை பெற்றார் இயேசு. மாசற்ற இயேசுவின் தோளில் பாரமான சிலுவை  சுமத்தப்பட்டது, ஆம் உலகத்தின் பாவம் அனைத்தும்மனுமகனின் தோளில். குற்றமற்றவரை குற்றவாளியாக்கி கொடூரமான சாவுக்கு கையளித்து கைகொட்டி சிரித்தது அதிகார வர்க்கம், இருப்பினும்இயேசுவின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி, காரணம் தன் கொடிய சாவால் பாவத்துக்கும் சாவுக்கும் சாவுமணி அடிக்கபோகிறேன் என்பதால். இயேசுதுணிந்து, வலிந்து சிலுவை மரத்தை ஏற்றுக்கொள்கிறார்.

இறைவன் தான் படைத்த நீச மனிதனின் ஈடேற்றுத்துக்காக தன்னை முழுமையாக தரும் அன்பு அளப்பரிது, இதைதான் புனித அகஸ்தீனார் கூறினார்,அடிமையை மீட்க மகனையை அளித்த அளப்பெரிய அன்புபெருக்கே என்று இறைவனின் அன்பை போற்றுகிறார். இன்று நமது அன்புப்பணி எவ்வாறுஇருக்கிறது, கொடுத்த பணம், பொருள் உதவிக்கு பாதகைகள் வைத்து விளம்பரம் தேடி தம்பட்டம் அடிக்கும் நிலைதானே. இயேசு கேட்பது பணம்,பொருள் தாண்டி உண்மையான உடனிருப்பு, உறவு என்பதை மறவவேண்டாம். சமூகத்தின் ஏற்றத்திற்கு நமது அர்பணிப்பு தேவை, பிறரின்சோதனையில் நமது உடனிருப்பு தேவை எனபதை உணருவோம், அன்புள்ள மனிதர்களாக வாழ்வோமே சிந்திப்போம்

செபம்

இரக்கம் மிகுந்த இறைவா! நாங்கள் மீட்பு பெற உம்மையே எங்களுக்கு முழுமையாக தந்தீர், அதுபோல நாங்களும் எமது உறவுகளின் வாழ்வுக்குமுழுமையாக அர்பணிக்க வரம் தாரும் ஆமென்.

 

மூன்றாம் நிலைஅன்பின் பாதையில் முதல் சறுக்கல்

இயேசுவுக்கு இருப்பது தோல்வலியோ அல்லது உடல்வலியோ அல்ல மாறாக மனவலி, மனிதரின் மாறாத குணம் தரும் மனவலி. அன்பு அன்பு செய்யபடவேண்டும் என்றார் புனித அசிசி பிரான்சிஸ், ஆம் அந்த அன்பு இயேசு போதித்த நற்செய்தி வாழ்வே, மூன்று ஆண்டுகள் இதற்காகவேகிறிஸ்து தனது வாழ்வை அர்பணித்து மனிதர் உண்மையான மகிழ்ச்சி பெற உதவினார். ஆனால் மனிதரோ கிறிஸ்துவை மறுத்து இழிவான வழியில்கிடைக்கும் சிற்றின்பத்திற்கு அடிமையாகும் நிலைக்கண்டு இயேசு கலங்கினார். கலிலேயா தொடங்கி யெருசலேம் வரை இயேசு உண்மையை உரக்கபோதித்தார் ஆனால் மாறாத மனிதரின் நிலைக்கண்டு இயேசு தடுமாறுகிறார், அதுவே இந்த சறுக்கல். சறுக்கல்தான் ஆனால் இயேசு விழுந்துகிடக்கவில்லை, மாறாக எழுந்து சிலுவை சுமக்கிறார், மனிதர் குணம் மாறும் அங்கே மனம் வாழும் என்றே!

அன்புக்குரியவர்களே! நமது மனமும் குணமும் எவ்வாறு? நம்மில் நம்பிக்கை வைத்து நம்மை படைத்த இறைவன் முன்னேறி செல்கிறார், நாம்பிறரின் வலியை போக்க துணை செய்கின்றோமா அல்லது பிறர்க்கு வலியை ஏற்படுத்துகின்றோமா? இன்றைய உலகம் காயங்கள் நிறைந்துகாணபடுகிறது, அக்காயங்களை குணமாக்குவது யார், நாம்தான் நமது நம்பிக்கைதான் என்பதை இயேசுவின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. விழுந்துகிடக்கமால் எத்தனை ஈடர்பாடுகள் வந்தாலும் எழுந்து நடப்போம், காயமற்ற சமூகத்தை அமைக்க வலுச்சேர்ப்போம்.

செபம்

நம்பிக்கையின் இறைவா! எங்களது வாழ்கை பாதையில் நாங்கள் சோர்வடையாமல் துணிந்து என்றும் சென்றிட வரம் தாரும் ஆமென்.

 

நான்காம் நிலைஅன்பின் சந்திப்பு

ஆண்டவர் இயேசு தனது அன்பு தாய் புனித மரியன்னையை சந்திக்கின்றார், இது இரண்டு உயிருள்ள அன்புக்களின் சந்திப்பு. ஈரைந்து மாதங்கள் தன்கருவிலே இறைவனின் வார்த்தையை தாங்கி அதற்கு உருக்கொடுத்து, இவ்வுலகிற்கு இயேசுவாக வழங்கினார். கருவிலும், கரத்திலும் மார்பிலும்போற்றி வளர்த்த மகன் கொடிய வதைக்கு உள்ளாகி சிலுவை சுமந்து குற்றவாளியாக ஊர் தூற்றும் நிலைக்கண்டு அன்னை மரி பதறுகிறார்.  கண்ணீர்கடலாய்  நிறுக்கும் தன் அன்புத்தாயின் கரம் பற்றிய இயேசு, அங்கு வார்த்தைகள் இல்லை கண்கள் மட்டுமே ஆறுதலை பரிமாறிக்கொள்கின்றனஆனால் இதுதான் இறைவனின் திட்டம் என அறிந்து அனைத்தும் மனத்தில் பொதிந்து பொங்கி அழுகிறார் மரியா. மகனின் பயணம் ஒரு அன்புபயணம் என புரிந்த மரியா ஆறுதல் அடைகிறார்.

 

இன்றும் பல தாய்மார்கள் கண்ணீரோடு நிற்கின்றனர், இவர்களின் கண்ணீருக்கு இயேசு போல அன்பு பயணங்கள் அல்ல மாறாக தடம் புரண்ட மனிதவாழ்வால், மது, மாது, பணம், தீவிரவாதம், திருட்டு என வாழ்வை இழந்து நிற்கும் பிள்ளைகளின் நிலைகண்டு. இன்று பல பெற்றோர்கள் தங்கள்பிள்ளைகளுக்கு படிப்பு மற்றும் பல ஏற்றங்களை தர முயலுகின்றனர் ஆனால் கடவுள், மனசாட்சி, அன்பு வாழ்வு எதையும் தர மறுக்கின்றனர் விளைவுசமூகத்தில் கறைபடிந்த மனிதர்களை உருவாக்குகின்றனர். இங்கு தேவை இயேசுவின் வழி நடக்கும் மனிதர்கள் தாய்மார்களே இதைஅன்னைமரியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

செபம்

அன்பின் இறைவா! உம் தாய் மரியன்னையைப்போல நல்ல பிள்ளைகளை நாங்கள் இந்த சமூகத்திற்கு வழங்க அருள்தாரும் ஆமென்.

 

ஐந்தாம் நிலை : அன்புக்கு கிடைத்த நட்பு

பாரமான சிலுவை, முற்கள் நிறைந்த சாட்டை அடியின்  கொடிய சித்தரவதை ஆகிவற்றின் காரணத்தால் இயேசுவின் திருவுடல் கிழிந்துதொங்குகிறது, எங்கே இவர் கல்வாரி போகும்முன்பே வழியிலே இறந்துவிடுவாரோ , சிலுவை என்ற அவமான மரணத்திலிருந்து தப்பித்துவிடுவாரோ என்ற அச்சம் உரோமை வீரர்களுக்கும், யூத குருக்களுக்கும் மேலோங்கிருந்தது. தங்களது திட்டம் தோற்க கூடாது என்பதற்காக, அங்குவேடிக்கை பார்க்க வந்த சீரேனே ஊராகிய சிமியோனை சிலுவை சுமக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். பனிரெண்டு திருத்தூதர்களுக்கும்,எழுவத்திரண்டு சீடர்களுக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு இந்த ஏழை விவசாயிக்கு கிடைத்தது. இயேசுவின் பரிதாபமான நிலைகண்டு வருந்தி அவருக்கு உதவிட  தானும் அவருடன் இணைந்து சிலுவையை சுமக்கிறார்.  வருந்தி சுமை சுமப்போரே வாருங்கள் என்னிடம் நான் உங்களுக்குஇளைப்பாறுதல் தருகிறேன் என்று சொன்ன மனுமகன், சிமியோன் தரும் சிறு இளைப்பாருதலினால் மகிழ்கின்றார். தனது துன்பமான நேரத்தில்எவ்வித கைமாறும் எதிர்பாராமல் வந்த தோழமையை நினைத்து இயேசு உற்சாகமடைந்து மீட்பு பயணத்தில் முன்செல்கிறார்

இன்றும் மனிதம் உயிர் வாழ்வதற்கு சிமியோன் போன்ற நல்ல உள்ளங்கள்தான் என்பதை நாம் மறவவேண்டாம். இன்பத்தில் கூடி கொண்டாடும் பலர்துன்பம் வந்ததும் ஓடி ஒளிந்து விடுவதை பார்க்கின்றோம், அத்தகய ஈன குணம் மனிதம் அல்ல என்பதை உணர்வோம், உண்மையான உறவுக்குமதிப்பளித்து, பணத்தால் வரும் கானல் உறவுகளை களைந்து ஏழை, எளியோருக்கு தன்னலம் பாராமல் உதவும், வெற்று விளம்பரங்களை தவிர்த்துஉண்மையில் உறவுக்கு கைகொடுப்போமே.

செபம்

இறக்கம் நிறைந்த இறைவா, போலியான உறவினை தவிர்த்து, உண்மையை மனதில் ஏற்றி துன்பத்தில் இருக்கும் அனைவருக்கும் என்னால் இயன்றஉதவியை செய்திட வரும்தாரும் ஆமென்.

அன்புக்கு கிடைத்த பரிசு

 

ஆறாம் நிலைஅன்புக்கு மீண்டும் ஒரு தோழமை

பூகம்பம் இடைய ஒரு இனிய தென்றல் இயேசுவின் முகத்தை வருடி சென்றது, ஆம் வெரோனிக்காள்  என்ற அந்த பெண் தென்றல் அன்று ஒரு அன்புபுரட்சி செய்தது, இயேசு சிலுவை சுமந்து செல்லும் பாதையில் பலர் வேடிக்கைப்பார்த்தனர், சிலர் வேதனைப்பட்டனர், ஆனால் யாரும் ஏசுவுக்கு உதவவேண்டும் என்ற துணிச்சலில்லை, அந்த புரட்சியை வெரோனிக்காள் செய்து முடித்தார். இரத்தம், புழுதி படிந்த இயேசுவின் முகத்தை வெரோனிக்காள்துடைத்தார், மனுமகனுக்கே மாபெரும் ஆறுதல் அளித்தார், அந்த அன்பு  மனிதகுல மகளிருக்கு, அன்பின் ஆண்டவர் அந்த சிறுதுணியில் தனதுதிருமுகத்தை பதித்து பரிசளித்தார்.

வெரோனி க்காள் போன்ற மனிதரில் மாணிக்கம் நமது மத்தியிலும் உண்டு ஆனால் அவர்கள் ஒருசிலரே என்கின்றபோதுதான் நெருடலாக இருக்கிறது. பணம், பதவி, வலிமை என்று சமூகத்தில் செல்வாக்கு உடையோர் நம்மில் பலர் இருந்தாலும், சமூக விடியலுக்கு உண்மையாக உழைக்க வருவதில்லை என்பதுதான் உண்மை. இயேசு விரும்புவது வெறும் விசுவாசமில்லை மாறாக சேவை நிறைந்த விசுவாசம், அவர்களுக்கு மட்டும்தான் அவர்தரும் நிம்மதி என்ற அன்பு பரிசு கிடைக்கும். செல்வத்தில் புரண்டாலும் அதை இல்லாதவரோடு பகிர மனமில்லை என்றால் நிம்மதி ஒரு எட்டக்கனியே, நம்மால் இயன்ற உதவியை, ஏழைக்கும், நற்செய்தி பணிவாழ்வுக்கும் அளிப்போம், ஏழைக்கு இறங்குவது இயேசுவுக்கே இறங்குவது என்பதை உணர்வோம். வலக்கை செய்வதை இடக்கை அறியமால் இருக்கட்டும், இதை காணும் இறைவன் மட்டுமே நமக்கு முழுமையாக இறங்குவாரே!

செபம்

அன்பின் இறைவா! எங்களால் இயன்ற உதவியை இச்சமூக விடியலுக்கு வழங்க வரம்தாரும் ஆமென்.

ஏழாம் நிலை: அன்பின் பாதையில் இரண்டாம் சறுக்கல்

யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள் இங்கு இறைமகனுக்கே அடிச்சறுக்குகிறது, மீண்டும் ஒருமுறை இயேசு சிலுவையின் பாரத்தால் தான் படைத்தமண்ணில் சாய்கிறார். அவர் தடுமாறவில்லை, ஆனால் நமது நயவஞ்சகத்தால் புழுதியில் தள்ளப்படுகிறார், மனிதரின் குணம் கண்டு படைத்தவன்கலங்குகிறார். நாம் மாந்தருக்கு வழங்கிய முழு சுதந்தரத்தை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தும் நிலைகண்டு வருந்துகிறார், மனிதர் இறைவனின்சாயல் என்பதை மறந்து அவர்களை கொத்து கொத்தாக கொல்லும் மனிதம் இழந்தோரை நினைத்து துடிக்கிறார். உலகம் செல்லும் பயங்கரவாதபாதை, மனிதரை மனிதர் பழிவாங்கும் பாதை, மக்களை ஏமாற்றி நடக்கும் எண்ணற்ற ஊழல்கள், மனிதரிடையே ஒற்றுமையின்மை, சீரழிவுகளைபோக்க மனமில்லாமை பெண்ணடிமை, குடும்பத்தில் அன்பின்மை, இறைவனை மறந்து வாழ்வும் கொடிய நிலைமை ஆகிய கொடிய மனிதசீரழிவுகளை நினைத்து பதறித்தான் இயேசு இங்கு  விழுகிறார்.

 

இன்று விழுந்து கிடப்பது இயேசு என்று சமூகம் என்பதை நாம் மறவவேண்டாம், இதை சரிசெய்வது இயேசுவின் சீடர்களாகிய நாம்தான், அந்தகடமையும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு உண்டு என்பதை நாம் தட்டிகழிக்க கூடாது. இன்றைய பல சிக்கல்களுக்கு காரணமாக இருப்பது நமது தடித்தவார்த்தைகள்தான், இதைதான் வள்ளுவ பெருந்தகை கூறினார், தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடு என்று, நமது நாவைகாப்போம், மனிதரின் நலனை காப்போம். குடும்பத்தில் உள்ள சிக்கல்களை களைவோம், ஒருவர் ஒருவருக்கு மதிப்பளித்து, குடும்ப ஒற்றுமையைபோற்றுவோம், ஆண்டவரின் வார்த்தையை அன்னை மரியைப்போல உள்ளத்தில் நிறுத்தி இல்லத்தில் வாழ்ந்து சமூகத்திற்கு எடுத்து செல்வோம்அங்கே விழுந்து கிடக்கும் மனிதரை கைதூக்கி நிறுத்தி,  விழுந்து கிடக்கும் இயேசுவை தூக்கி விடுவோமே !

செபம்

ஆறுதலின் இறைவா, சமூகத்தில் இருக்கும் எண்ணற்ற இழிவுகளை போக்க என்னையே நான் அளிக்க அருள்தாரும் ஆமென்.

எட்டாம் நிலை: அன்புக்கு ஆதரவு

இயேசுவின் நிலைக்கண்டு, யெருசலேம் நகர பெண்கள் மாரடித்து புலம்புகின்றனர். பார்வையற்றவருக்கு பார்வை தந்தவர், முடக்கவாத முற்றவரைநடக்க வைத்தவர், எண்ணற்ற ஏழைகளுக்கு நற்தொண்டு புரிந்தவர் அனைத்திற்கும் மேலாக இறந்தவரையும் உயிர்ப்பித்தவர் அவருக்கா இந்தஅவமான சிலுவை தண்டனை, கொடிய சித்தரவதை என சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் யேசுவோ தனக்காக மாரடித்து அழும் பெண்களிடம், பச்சமரத்திற்கே இந்த பாடென்றால் பட்ட மரத்திருக்கு என்ன நிலையோ, எனவே உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள் என்கிறார்.

இயேசுவின் கூற்று முற்றிலும் உண்மை, இன்றைய இளையோர் இறைவனை மறந்து, ஏன் பெற்றோர்கள், குடும்பத்தையும் மறந்து தான் தோன்றிதனமாக வாழ்வதை பார்கின்றோம். உலக இன்பம், நண்பர் கூட்டம், குடி களியாட்டம், போதை, பேதை  என வாழ்ந்து தங்களுது எதிர் காலத்தைஇழப்பதை பார்கின்றோம். அவர்களுக்காக இறைவனிடம் அழுது, அவர்கள் நல்வழியில் புதிய வாழ்வுப்பெற்றிட வேண்டுங்கள் என்கின்றார். செபமேஇறைவனின் இதயத்தை திறக்கும் சாவி என்று புனித தந்தை பியோ கூறுகின்றார், ஆம் செபத்தால், தபத்தால், உண்மையான வாழ்வால் இறைவனின்ஆசீரை நமது பிள்ளைகளுக்காக கொணர்வோம், ஆற்றல்மிக்க சமூகத்தை, அன்புள்ள இளையோரை, உண்மையான நாளைய உலகை இன்றுஎழுப்புவோமா?

செபம்

கனிவான இறைவா, எம் இளையோரை ஆசீர்வதியும், அவர்கள் இயேசுவின் பாதையை தெரிந்து உண்மையிலும், அன்பிலும் வழிநடக்க வரம்தாரும்ஆமென்.

 

ஒன்பதாம் நிலை: அன்பின் பாதையில் மூன்றாம் சறுக்கல்

மீண்டும் ஒருமுறை  சிலுவையின் பாரத்தால் இறைவனின் மகன் மண்ணில் சாய்கிறார், மனிதனின் பாவத்திற்காக புழிதியில் விழுந்து கிடக்கிறார்.அவரை வீழித்தியது நீங்களும், நானும்தான், நமது பாவம்தான், எனபதை உணர்வோமா, பிறரை மன்னிக்காத போது, பிறருக்கு களங்கம்கற்பித்தபோது, பிறருக்கு இயன்றும் உதவாதபோது, இறைவனை மறந்து உலக இன்பத்தில் திளைத்தபோது, மீண்டும், மீண்டும் இயேசுவை மண்ணில்விழ்த்துகின்றோம். நம்மை படைத்து, நமக்கு வாழ்வளித்து, காத்த இறைவனுக்கு நாம் அளிக்கும் நன்றி பரிசு இதுதானா, மிகவும் வேதனையானது.என் வார்த்தைகளை நம்பாவிட்டாலும், என் செயல்கள் பொருட்டாவது நம்புங்கள் என்றார், ஆம் அவரது சொல்லும், செயலும் ஒரே நேர்க்கோட்டில்செல்லும் ஆற்றல் மிக்கது, அவரது வாழ்வில் பொய் புரட்டுக்கு இடமில்லை, உண்மை, நன்மை, அன்பு இவற்றுக்கு மட்டும்தான் இடம், அதுதான்மனிதருக்கு மகிழ்ச்சிதரும் பாதை என்றார், எத்தனை பேருக்கு அவர் உரைத்து கேட்டது?

 

இயேசுவின் வார்த்தையை நம்பாததால் நம் வாழ்வில் விளைந்தது என்ன? துன்பம், வேதனை, பிரிவு, நோய், தனிமை என்பதுதானே? பணம்,பொருள்,வசதி அனைத்தும் இருந்தும் நிம்மதி எங்கே? என்று குரல் நம் உள்ளத்தில் ஓங்கி ஒலிக்கவில்லையா? ஆம் அன்புமிக்கவர்களே! உலகம் காட்டும்பாதைக்கு மயங்கி, உங்களையும், உங்கள் பிள்ளைகளையும், உங்கள் குடும்பத்தையும் இழக்க வேண்டாம், அவ்வாறு செய்தால் நடப்பது என்ன என்றுநம்மை சுற்றி நடக்கும் அவலங்கள் நமக்கு தெரியும். எனவே இயேசுவின் உயிருள்ள வார்த்தைக்கு செவிமடுப்போம், பாவத்தை விலக்கி, நன்மையைநாடுவோம், நிம்மதி என்ற வெளிச்சம் நம் உள்ளத்தில் ஒளிரும் என்பதை உளமார நம்புவோமே? விழுந்து கிடக்கும் இயேசுவை நமது தூய வாழ்வால்தூக்கி நிறுத்துவோமா?

செபம்

அன்பின் இறைவா, பாவத்தை நீக்கி, நன்மையை நாங்கள் என்றும் நாடவும், உண்மையின் ஒளியில் உமக்கு என்றும் சேவை புரியவும் வரும்தாரும்ஆமென். 

 

பத்தாம் நிலை: ஒளிவு மறைவற்ற அன்பு

ஆண்டவரின் ஆடைகள் உரியப்படுகின்றன, ஆம் அவற்றோடு சேர்த்து அவரின் தோலும் உரிக்கப்படுவதுதான் கொடுமை. கசையடிக்கும், எண்ணற்றகொடுமைகளுக்கும் உள்ளான அவரது திருவுடல் இப்போது ஆடைகள் உரியபடுவதன் மூலம், பல காயங்கள் மீண்டும் புதிதாய் திறக்கின்றன.உயிரோடு ஆண்டவரின் தோல் உரிக்கப்படுவதுதான் உண்மை, அவரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துகின்றனர்  ஆடையில்லா மனிதன் அரைமனிதன் என்கிறது பழமொழி, இங்கு இந்த கொடிய மனம் படைத்த மனிதர்கள் அவரை ஒரு உயிராக கூட மதிக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.ஏழைக்கு உடுத்தியவரை, உணவளித்தவரை, உண்மையை மட்டும் வாழ்வால் உரக்க கூவியவரை அவமானபடுத்தி எள்ளி நகையாடுகின்றனர்,ஏளனம் செய்து கைகொட்டி சிரிக்கின்றனர். மனிதம் முழுமையாக கொண்டவரை ஒரு விலங்கைப்போல நடத்தி மனிதத்தை காரி உமிழ்கின்றனர்.அன்பு புரட்சிக்கு அவமானம் மட்டும்தான் மிச்ச சொச்சமா? மனிதரின் மிருதனத்தை குறித்து  இயேசு கலங்குகின்றார், மனிதம் மறையும் நிலைகண்டுவேதனை படுகின்றார்

ஓ மனிதா இன்று எத்தனை பெண்கள் மானபங்கம் படுத்தப்படுகின்றனர், அவர்கள் இல்லத்தில், வேலை செய்யும் இடத்தில், பொது இடங்களில் நீஉணர்ந்தாயா? உன் தாய், தங்கை, மகளாக, மற்ற பெண்களை ஏற்க மறுப்பதால் விளையும் கொடுமை என்பதை என்றுதான் உணரபோகிறாய்?இறைவனின் பொறுமைக்கு எல்லை உண்டு, அதை மறந்தால், நடக்கும் என்ன என்பதையும் நீ அறிவாய், பிறகு எதற்கு வரம்பு மீறி பாவத்தைக்கட்டிதுன்பத்தில் விழுகின்றாய், யாரையும் கேவல படுத்தாதே, கேவலமாக பேசாதே, அதை நீ இயேசுவுக்கே செய்கிறாய் என்பதையும் மறவாதே. நீயும்நானும் இயேசுவின் பிள்ளை, அவர் அவமானம் பட்டது நமது மானமான, மரியாதையான வாழ்வுக்குதான் எனபதை ஒருபோதும் மறவாதே, ஒருவர்மற்றவரை மதித்து, பிறரின் அந்தரங்க வாழ்வுக்கு மதிப்பளித்து அவர்களை நல்வழி படுத்தும் செயலில் மட்டும் இறங்கி புதிய விடியலுக்குவழிக்காட்டுவோமே, அது மட்டுமே சரியான அன்பின் பாதை எனபதை உணர்வோம்!

செபம்

அன்பின் இறைவா நாங்கள் ஒருவர் மற்றவரை மதித்து, மனிதத்தின் மாண்பைக் காத்து வாழ்ந்திட வரம்தரும் ஆமென்.

பதினோராம் நிலை: அன்பினை ஆணிகளால் துளைக்கின்றனர்

இயேசுவை சிலுவையின் மீது கிடத்தி மூன்று ஆணிகளால் அறைந்து  அவரை அந்த சிலுவையோடு இணைக்கின்றனர், இயேசுவின் நரம்புகள்அறுக்கப்படுகின்றன, எலும்புகள் முறிக்கப்படுகின்றன, இரத்த நாளங்கள் எல்லாம் அறுந்து தெறித்து இரத்தம் பீறிட்டு ஓடுகின்றது. சொல்லன்னாதுன்பத்தில் இயேசு ஒரு புழுவைப்போல துடிக்கின்றார், மனித உருவம் முற்றிலும் சிதைந்து காணப்படுகின்றார். மனிதாபமற்ற அந்த உரோமைவீரர்களும், யூத குருக்களும் அவரின் இந்த நிலைகண்டு சிறிதும் பதறாமல் கொண்டாடுகின்றனர். ஆணிகள் கொண்டு அன்பு புரட்சியைமுடக்கிவிடலாம் என்று இரத்த வெறிபிடித்த அந்த அதிகாரவர்க்கம் எத்தனிக்கிறது. உதவிகள் செய்தே பழக்கபட்ட ஆண்டவரின் புனித கரங்களைகூர்மையான ஆணிகள் குத்தி கிழிக்க மனுமகனின் குருதி மண்ணில் ஆறாய் ஓடுகிறது. கலிலேயா தொடங்கி யெருசலேம் வரை நற்செய்தியைஓய்வின்றி பறைசாற்றிய காலுகளுக்கு ஆணிகள் கொண்டு அணிகலன்களா, அந்த ஆணிகள் அவரின் புனித கால்களை கிழித்துக்கொண்டுசிலுவையோடு இணைக்கிறது. இத்தனை கொடுமைகள் மத்தியிலும் மனிதா உனக்கு என் அன்பு என்றுமே உண்டு என முனுமுனுக்கிறார் ஆண்டவர்.

 

அன்புக்குரியவர்களே! ஏன் இத்தனை பாடுகள், யாருக்காக நமக்காக எனபதை உணர்வோமே, இயேசுவின் இரத்தமே இவ்வுலகின் மீட்பு, கிறிஸ்துவின்வழியின்றி மானிடருக்கு மீட்பில்லை, என்பது உண்மை என்பதை உணர்வோமா? நம்முடைய பாவங்கள் இயேசுவின் புனித இரத்தத்தால்கழுவப்படுகின்றன, புதிய வாழ்வை நாம் பெறுகின்றோம். இன்றும் எத்தனயோ மக்கள் கொடிய உடல் வலிக்கும், மன வலிக்கும்உள்ளாக்கப்படுகின்றனர், நம்முடைய இரக்கமற்ற சொல், செயல் பலரின் மனதை குத்தி கிழித்தி ஆறா வடுவை ஏற்படுத்துகின்றன.கடும்வார்தைகளால்  இன்று பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன, அப்போது எல்லாம் இயேசுவையே குத்தி கிழிக்கின்றோம் என்பதை என்றாவதுஉணர்ந்தது உண்டா. பிறருக்கு மதிபளிப்போம், குறிப்பாக சோதனையான நேரத்தில் தோள் கொடுப்போம், துணை நிற்போம்.  வன் சொல் அகற்றி இன்சொல்லில் இயேசுவுக்கு சிறு ஆறுதல் தருவோமே!

செபம்

ஆறுதலின் இறைவா, பிறருக்கு துன்பம் தரும் சொல், செயல் அகற்றி, என்றும் உன் வார்த்தையின் வழியில் வாழ வரம்தாரும் ஆமென்.

 

பன்னிரெண்டாம் நிலைஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

இயேசு சிலுவையில் மரிக்கிறார், வாழ்வு தர வந்த வாழ்வின் நாயகனை இந்த வஞ்சக உலகம் கொன்று, நீதியை வேரோடு சாய்த்து விட்டதாககொக்கரிக்கிறது. எல்லாம் நிறைவேறிற்று என்ற நிறைவில், முப்பத்தி மூன்று வயதில் இயேசு தனது ஆவியை தந்தை இறைவனிடம்ஒப்படைக்கிறார். இறை அரசை பாலஸ்தீனத்தில் அடித்தளமிட்டு, அதை உலகெங்கும் எடுத்து செல்ல சீடர்களையும் உருவாக்கி, அன்பான,உன்னதமான, அமைதியான, ஒற்றுமையான உலகம் நாம் செய்வோம் என்ற நம்பிக்கையில் இயேசு சிலுவையில் உறங்குகிறார். தான் படைத்தஉலகத்தை சீரமைக்க இயேசு எடுத்துக்கொண்ட பணி, மகத்தானது, பாவம் போக்க, சாபம் போக்க, சாவையும் நீக்க தன்னை முழுமையாக நமக்கு தந்துஅன்பின் மறுபக்கம் அவரேதான் என்று நிருபித்துள்ளார். தந்தையே என்னை கைவிட்டது ஏனோ என்று கதறினாலும், தான் எடுத்துக்கொண்ட மீட்புபணியிலிருந்து எள்ளளவும் விலகாமல் அன்புப்பணி புரிந்தார். சோதனைகளை கடந்து சாதனை புரிந்துள்ளார், அநீதியை வென்று நீதியைநிலைநாட்டியுள்ளார், அன்புவழி நடக்கும்  யாவருக்கும் விண்ணக வாசலை திறந்துள்ளார், இயேசுவின் மரணத்தால் இறைவனின் இரக்கம் நம்மைநோக்கி இறங்கியுள்ளது.

 

அன்பானவர்களே, நமக்காக ஆண்டவர் இயேசு சிலுவையில் மரித்துள்ளார், பாவ வாழ்வை அகற்றி தூய்மை வாழ்வை நாம் நாடவும், அநீதிக்கு எதிராககுரல் கொடுக்கவும், ஏழை எளியோரின் காவலராய் நாம் என்றும் இயங்கவும் வல்லவராம் கிறிஸ்து தன்னையே சாவுக்கு உட்படுத்திள்ளார்.இயேசுவின் மரணம் புது வாழ்வுக்கான தொடக்கம், சாவை வென்று வெற்றி வீராக கிறிஸ்து உயிர்த்தெழுவார் அன்று நம் நம்பிக்கைகளுக்கு புதுவடிவம் தருவார் எனபதுதான் எதார்த்தம். நமது தோல்வி, துன்பம், சோகம், இழப்பு, வேதனை அனைத்தும் இந்த மரணத்தோடு மரணித்து விட்டதுஎன்பதுதான் உண்மை. உண்மைக்காக கிறிஸ்து போரடியதுப்போல நாமும் முன் வரவேண்டும், நம்பிக்கை இழந்தவரின் வாழ்வில் நம்பிக்கை தீபத்தை நாமும் ஏற்றுவோமே,! அன்புக்கு முடிவுயேது, மரணமேது, அது புதிய பரிணாமம் பெரும், இரவை வெல்லும் பகலவனாய் அது விரியும் !

செபம்

அன்பின் இறைவா, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் நம்பிக்கை இழக்காமல், என்றும் உன் வழியில் போராட வேண்டிய வலிமையை வரம்தாரும் ஆமென்.

 

பதிமூன்றாம் நிலை: தொட்டிலில் அன்பு

இறந்த இயேசுவின் உடல் அவரது அன்பு தாயின் மடியில் வளர்த்தப்படுகிறது, உயிரற்ற மகனின் உடல் கண்டு உள்ளம் குமருகிறார் அன்னை மரி.அன்று வானவன் வார்த்தையினால் புனிதமாக தனது உதரத்தில் உருவான இறைமகன், தன் இரத்தத்தின் இரத்தம், தன் தசையின் தசை, தன் அன்புமகன் நிலைகண்டு கதறுகிறார். அந்த அன்புதாய்க்கு எவ்வாறு ஆறுதல் தரயியலும், யாரால்தான் இயலும். பித்து பிடித்தவள் போல் இறந்த தன்மகனை மடியில் போட்டுக்கொண்டு புலம்புகிறார், என் மகன் இறக்கவில்லை, உறங்குகிறார் என்று அழுது ஒப்பாரி வைக்கிறார். பாவ மாசற்ற தன்மகனை இந்த உலகம் கொன்றதை குறித்து அவள் கோபம் கொள்ளவில்லை, இவ்வளவு கொடிய மரணத்தின் மூலம்தான் மானிடத்தை மீட்க நீர்திருவுளம் கொண்டீரோ என்று வேதனையில் அழுகிறார். அவள் கண்ணீரின் ஒவ்வொரு துளிக்கும் நாம்தான் பதில் சொல்ல வேண்டும், அதை நமதுபுனித வாழ்வால் அவளுக்கு ஆறுதல் தருவதே நியாயமாகும்.  நம் பாவங்கள்தான் அவளுது மகனை கொன்றாலும், நம் மீது சிறிதும் அவருக்குவருத்தமில்லை, மாறாக தன் மகனின் மரணத்தால் நாம் பெற்றுக்கொண்ட அன்பு வாழ்வை போற்றிக்காத்திட வேண்டும் என்றுதான் அவளது கண்ணீர்நமக்கு விடுக்கும் அழைப்பு.

 

இன்றும் எத்தனையோ தாய்மார்கள் கண்ணீரோடு வாழ்கின்றனர், காரணம் அவர்களின் மக்கள் அன்பு வாழ்வை இழந்து, தான்தோன்றி தனமாகவாழ்வதால். இன்றைய இளைய உலகம், குடும்பத்தை மறந்து, குறிப்பாக வயதான பெற்றோரை மறந்து, சுகபோக வாழ்வில் உள்ளனர், இதனால்இன்று பல வயோதிக பெற்றோர் தனிமையிலும், முதுமையிலும், நோயிலும் வாடுகின்றனர். பல பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இருந்தும்,இல்லாதவர்களாக உள்ளனர். அந்த தாய்மார்களின் கண்ணீருக்காகவும் சேர்த்துதான் அன்னை மரி வேதனைப்படுகிறார். இருண்ட உலகில் வாழும்மக்களே, உலக இன்பத்தை விட்டு வெளியே வந்து உண்மையான மகிழ்ச்சியை பெறுங்கள், என் மகனின் மரணம் உங்களுக்கு புதிய சிந்தனையைதரவேண்டும் என்கிறார். அன்பு பெற்றோரின் காயங்களை போக்க ஒவ்வொரு மகனுக்கும், மகளுக்கும்  உரிமையும், கடமையும் உண்டு என்பதைஉணர்வோம், காலம் தாழ்த்த வேண்டாம் கிறிஸ்து நமக்காக இறந்துள்ளார், அவரது உயிர்ப்பில் புது வாழ்வை பெற்றோரும், பிள்ளைகளும்பெறுவோம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, இயேசுவின் ஒளியில், வழயில், அன்னை மரியின் பரிந்து பேசுதலில் வளர்ப்போம், அப்போதுதான்காயங்கள் இல்லா உலகை அமைக்க இயலும். சிந்திப்போம் !

செபம்

அன்பின் இறைவா, நாங்கள் ஒருவர் மற்றவரின் கண்ணீரை துடைத்து இணைந்து வாழ்ந்திட வரம்தாரும் ஆமென்.

 

பதினான்காம் நிலை : கருவறையில் மீண்டும் அன்பு

இயேசுவின் புனித உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது. அமைதியில் ஆழ்கிறார் இறைவனின் திருமகன், தந்தை கடவுள் தன்னிடம்ஒப்படைத்த உலகத்தின் மீட்பு பணியை செவ்வனே முடித்து ஓய்வு கொள்கிறார். கோழைப்போல இயேசு மரணத்தை கண்டு அஞ்சவில்லை, துணிந்துசென்று சிலுவை மரணத்தை ஏற்று அனைவருக்கும் நிலைவாழ்வை உறுதிப்படுத்தியுள்ளார். இயேசுவை கொன்று வாழ்வை வீழித்தி விட்டோம் எனஅதிகாரவர்க்கம் கொண்டாட்டத்தில் திளைக்கிறது, ஆனால் இன்னும் மூன்றே நாளில் அவர்களுக்கு திண்டாட்டம்தான் என்பது தெரியவில்லை.உண்மை ஒருபோதும் வீழ்வதில்லை, பகலவனை யாரும் கையால் மறைக்க இயலாது, கிறிஸ்து வெற்றி வீராக சாவை வென்று புதிய வாழ்வு தரஉயிர்த்தெழுவார். இங்கு உறங்குவது விண்ணக விதை, அது தன்னை மண்ணோடு மடிந்துள்ளது, தன்னலத்தை இழந்துள்ளது, மீண்டும் விண்ணைகாண விருச்சகமாக எழும். பாவ இருளகற்றி, அகஒளி ஏற்றும், துன்பத்தை நீக்கி இனபத்தை அருளும், அடிமை விலங்கொடித்து சுதந்திர காற்றைஅருளும்!

 

இயேசுவில் பாவம், சாபம், துன்பம், சாவு, அழுகை, தோல்வி என்பதில்லை, மாறாக புண்ணியம், புதுமை, வாழ்வு, வெற்றி என்பது மட்டும்தான் இனிஉண்டு. எத்தனை துன்பங்கள் நம்மை சூழ்ந்தாலும், கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் எதிர்கொண்டு வெற்றிபெறுவார். இனி நம் வாழ்வில் இருளில்லை,ஒளி மட்டுமே, ஒளியாம் கிறிஸ்து நம்மை அருள் வாழ்வுக்கு அழைத்து செல்வார். கிறிஸ்துவை நம்புவோம், வாழ்வை துணிச்சலோடுஎதிர்கொள்வோமே

செபம்

அன்பு இறைவா! நாங்கள் ஒருபோதும் எங்கள் நம்பிக்கையை உம்மில் இழந்து விடாமல் இருக்க வரும் தாரும் ஆமென்.

 

முடிவுரை

என்னில் விசுவாசம் இறப்பினும் வார்த்தை, கிறிஸ்துவில் என்றும் மரணமில்லை, மாறாக வாழ்வேநிரம்பியிருக்கிறது. என்னில் வாழ்பவர் என்ற கொள்வோம் கொள்வோம் கொள்வோம், சிலுவை பயணத்தோடுநமது கொள்வோம் கொள்வோம் கொள்வோம் கொள்வோம் கொள்வோம் கொள்வோம். கிறிஸ்து நம்மில் நாம் நிலைக்கொள்ளும் நிலைக்கொள்ளும் நிலைக்கொள்ளும் நிலைக்கொள்ளும். அதற்கான ஆற்றலை நமக்கு, நாமும் பிறருக்கு ஆண்டவனின் ஆசிவேண்டி. இயேசுவின் அன்பில் வாழ்க்கை பயணத்தை. ஆமென்.

 

-     அருட்பணி தைனிஸ் கப்புச்சின்

 

Dear Members of Tamil Catholic community,

I would like to invite you all to the Tamil Mass, which is celebrated on 17.06.18 Sunday at 1 pm in the Rudolfsheim Church, Meiselstrasse 1. The Mass will be offered for the repose of the soul of the beloved mother of Mrs. Viji and for those 13 persons, who were shot dead by the police during the protest against Sterlite.

இனிய தமிழ் கத்தோலிக்க உறவுகளே,

வருகின்ற ௧௭.௦௬.௧௮ ஞாயிறு அன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் தமிழ் திருப்பலிக்கு அன்போடு வரவேற்கிறேன். அன்றைய திருப்பலி திருமதி விஜி அவர்களின் தாயாரின் ஆன்ம இளைபாற்றிக்காகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஆன்மாக்களுக்காக ஒப்புகொடுக்கப்படும்.

 அன்புடன்,

அருட்பணி. தேவா 

Dear friends and members of Tamil Catholic community,

I would like to invite you to the Tamil Easter Celebration, which is held on 01.04.18 at 1 pm in the Rudolfsheim Church (Meiselstrasse 1, 1150 Vienna).

இனிய தமிழ் கத்தோலிக்க உறவுகளே,

வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் நாள் (01.04) மதியம் ஒரு (1.00)மணியளவில் ரூடால்ப்ஸ்ஹைம் ஆலயத்தில் தமிழ் உயிர்ப்பு பெருவிழாக் கொண்டாட்டம் நடைபெறும். அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

regards,
Fr. Devadass Pankaraj

அன்புள்ள தமிழ் கத்தோலிக்க உறவுகளே,

வருகின்ற 24.12.17 ஞாயிறு அன்று காலை  11.15 மணிக்கு மைசெல்ஸ்ட்ராசே1ல் உள்ள ரூடால்ப்ஸ்ஹைம் ஆலயத்தில் தமிழ் கிறிஸ்துமஸ் கொண்டாடத் திருப்பலி  நடைபெறும். . திருப்பலி முடிந்தவுடன்  உறவு விருந்தும் கலை நிகழ்ச்சிகளும்  நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு இறையாசீர் பெற அன்புடன் அழைக்கிறேன். 

அன்புடன்,

அருட்பணி. தேவதாஸ்

நமது திருப்பலி மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்களைக் காண  கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

https://www.facebook.com/tamilcatholiccommunityvienna

 

தொடக்கச் சடங்குகள்

(குரு பீடத்திற்கு வந்து வணக்கம் செய்யும் போதுஅனைவரும் எழுந்து நின்று வருகைப் பாடலைப் பாடுவோம்)

குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.

மக்கள்: ஆமென்.

குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

மக்கள்: உம்மோடும் இருப்பதாக.

மன்னிப்பு வழிபாடு:

 

குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

சிறிது மௌனத்துக்குப் பிறகு )

எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

மக்கள்: ஆமென்.

குரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.

மக்கள்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

குரு : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

மக்கள்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

குரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.

மக்கள்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

 

வானவர் கீதம்:

உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.

உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.

ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.

ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.

நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர்.

நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்

மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.

சபை மன்றாட்டு :

குரு :மன்றாடுவோமாக.

ஆண்டவரே, மகிழ்வோடு உம்மைத் தேடி வந்துள்ள எங்களுக்கு உம் திருமுகத்தைக் காட்டியருளும். எங்கள் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் வளரச் செய்தருளும். நீர் வாக்களிப்பதை நாங்கள் பெற்றுக் கொள்ளுமாறு, நீர் கட்டளையிடுவதை விரும்பி நிறைவேற்றுவோமாக. உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள்: ஆமென்.

 

அருள்வாக்கு வழிபாடு

முதல் வாசகம் ( அனைவரும் அமைதியோடு அமர்ந்து பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினைக் கேட்போம். )

வாசகர் : இது ஆண்டவரின் அருள் வாக்கு!

மக்கள்: இறைவா உமக்கு நன்றி!

 

பதிலுரைப் பாடல் :

 

இரண்டாம் வாசகம்

இது ஆண்டவரின் அருள் வாக்கு!

மக்கள்: இறைவா உமக்கு நன்றி!

அல்லேலூயாப் பாடல் ( எழுந்து நின்று பாடவும் )

 

நற்செய்தி திருவுரை:

இறைவன் தம் திருமகன் வழியாகப் பேசுகிறார்.)

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்கள்: உம்மோடும் இருப்பாராக.

குரு : புனித லூக்கா எழுதிய பரிசுத்த நற்செய்தியிலிருந்து வாசகம்.

மக்கள்: ஆண்டவரே உமக்கு மகிமை.

குரு : இது கிறிஸ்துவின் நற்செய்தி !

மக்கள்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்!

மறைவுரை முடிந்ததும்மெனமாகச் சற்று நேரம் தியானிக்கவும்.)

விசுவாச அறிக்கை (ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும்):

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்,) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதணையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென்.

 

விசுவாச அறிக்கை (பாடல் திருப்பலியில்) :

வானமும் பூமியும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார்

தந்தை சுதன் தூய ஆவியுமாய் தன்னில் உறவுடன் வாழ்கின்றார்.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருமகன் மரியிடம் மனுவானார்.

மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார்.

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் கல்லறை ஒன்றில் அடக்கப்படடார்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் மரணத்தின் மீதே வெற்றி கொண்டார்.

பரலோகம் வாழும் தந்தையிடம் அரியணை கொண்டு இருக்கின்றார்.

உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.

பரிசுத்த ஆவியை நம்புகிறோம் பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்.

திருச்சபை உரைப்பதை நம்புகிறோம் புனிதர்கள் உறவை நம்புகிறோம்

சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் - ஆமென்.

 

விசுவாசிகளின் மன்றாட்டு:

குரு: அன்பு மிக்க சகோதர சகோதிரிகளே! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய நம் ஆண்டவரிடம், இப்போது நம் தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமன்றி, நம் தாய் திருச்சபைக்காகவும், பாரத திருநாட்டிற்காகவும், உலக சமாதானத்திற்காகவும், நமது வேண்டுதல்களை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.

மக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்....

 

குரு: எங்கள் புகலிடமும் பலமுமாகிய இறைவா! எங்களுடைய பக்தியுணர்வைத் தூண்டி எழுப்புகின்றவர் நீரே ! உம்முடைய அன்பு மக்களின் உருக்கமான மன்றாடுக்களுக்கு தயவுடன் செவிமடுத்து, அவற்றை விரைவாகப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் - ஆமென்.

 

நற்கருணை வழிபாடு

காணிக்கைப் பொருட்களைத் தயாரித்தல்

மக்கள் காணிக்கைப் பொருட்களைச் சேகரிக்கும் போதும், பீடத்துக்கு எடுத்துச் செல்லும் போதும் காணிக்கைப் பாடலை பாடுகின்றனர்.

 

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)

ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

 

மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)

ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.

மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)

(கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)

 

குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.

மக்கள்: ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மன்றாட்டு:

குரு: எங்கள் இரக்கம் நிறைந்த தந்தையே,  நீர் எங்களுக்குக் கொடுத்தவைகளையே நாங்கள் உமக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றோம்.  இக்காணிக்கைகளை ஏற்று எங்களுக்கு உமது மீட்பைத் தந்தருளும்.  எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக

உம்மை மன்றாடுகிறோம்.

மக்: ஆமென்.

 

நற்கருணை மன்றாட்டு

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்கள்: உம்மோடும் இருப்பாராக.

குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.

மக்கள்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

மக்கள்: அது தகுதியும் நீதியும் ஆனதே.

குரு :

ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக

என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.

எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.

தூயவரான தந்தையே, உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும்,

உம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும்.

ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவுள்.

காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இருக்கின்றீர்.

அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர்.

நீர் ஒருவரே நல்லவர். ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் படைத்து,

படைப்புகளை நலன்களால் நிறைத்து,

உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவுளமானீர்.

ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,

இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர்.

உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து,

உம்மை இடையறாது புகழ்கின்றனர்;.

அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும்,

உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :

 

மக்கள்:

தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர்

வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன.

உன்னதங்களிலே ஓசான்னா! 
ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே

உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

 

 

நற்கருணை மன்றாட்டு 2

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், புனிதத்திற்கெல்லாம் ஊற்று.

ஆகவே, உம்முடைய தூய ஆவியைப் பொழிந்து , இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.

அவர் பாடுபட மனமுவந்து தம்மைக் கையளித்தபோது, அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ;

ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.

அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், கிண்ணத்தை; எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ;

ஏனெனில்இது புதியநித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.

இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.  இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

 

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!

மக்கள்: கிறிஸ்து மரித்தார்; கிறிஸ்து உயிர்த்தார்; கிறிஸ்து மீண்டும் வருவார்.

ஆகவே, இறைவா, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்ப்பையும் நினைவு கூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்களென எங்களை ஏற்றுக் கொண்டீர். எனவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும், கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவி ஒன்று சேர்க்க வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

இறைவா, உலகெங்கும் பரவியிருக்கும் உமது திருச்சபையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை........ எங்கள் ஆயர்......... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். எங்கள் அனைவரையும் அன்பின் நிறைவை அடையச் செய்தருளும்.

(தந்தையே, நீர் (இன்று) இவ்வுலகில் உம்மிடம் அழைத்துக் கொண்ட ....... என்னும் எம் சகோதரரை சகோதரியை) நினைவுகூர்ந்தருளும், இவர் திருமுழுக்கின் வழியாக உம் திருமகனுடைய சாவில் அவரோடு ஒன்றாய் இணைக்கப்பட்டது போல், உயிர்ப்பிலும் அவரைப் போல் இருக்கச் செய்தருளும். மேலும்,

உயிர்த்தெழும் நம்பிக்கையுடன் இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும், இறந்தோர் அனைவரையும் நினைவுகூர்ந்து, ஒளிமிக்க உம் திருமுன் ஏற்றுக்கொள்ளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இறைவனின் கன்னித்தாயான மாட்ச்சிமிக்க மரியாள், புனித அப்போஸ்தலர் இவ்வுலகில் உமக்குகந்தவராய் இருந்தவர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலையான வாழ்வில் தோழமை கொண்டு, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்.

இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.

மக்கள்: ஆமென்.

 

திருவிருந்துச் சடங்கு :

 

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

 

மக்கள்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,

உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.

உம்முடைய இராட்ச்சியம் வருக.

உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,

பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.

தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

மக்கள்: ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, |அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்| என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

மக்கள்: ஆமென்.

குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.

மக்கள்: உம்மோடும் இருப்பதாக.

குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!

(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)

மக்கள்: 

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

(பாடல் திருப்பலியில்)

 

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!

எம் மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!

எம் மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!

எமக்கு அமைதி அருளும்.

(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!

மக்கள்: ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.

(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)

(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)

குரு : கிறிஸ்துவின் திருவுடல்

நன்மை வாங்குபவர் : ஆமென்.

 

திருவிருந்து பாடல்:

 

 

(சிறிது நேரம் மௌனம் காத்து அல்லது நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக.)

 

 

 

 

குரு : செபிப்போமாக. இறைவா, உம் திருமகன் வழியாக நீர் எங்களுக்கு அளித்த மீட்பை இத்திருவெளிபாட்டில் நாங்கள் கொண்டாடி மகிழ்ந்தோம், இந்த அனுபவத்தின் ஆற்றலால், சமுதாயத்தில் நிலவும் நன்மை தீமைகளைப் பகுத்தாயும் தெளிந்த பார்வை பெறவும், உம்மீது மாறா அன்பு கொண்டு, சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கவும் வரந்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள்: ஆமென்.

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்கள்: உம்மோடும் இருப்பாராக.

குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!

மக்கள்: ஆமென்.

குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று.

மக்கள்: இறைவா உமக்கு நன்றி.

 

(குரு பீட வணக்கம் செய்து பீடப் பணியாளர்களுடன் திரும்பிச் செல்கிறார்.

நாமும் இறைவனைப் புகழ்ந்தேத்திய வண்ணம் நற்செயல்களைப் புரிய இல்லம் திரும்புவோம்)

 

The Tamil Catholic community in Vienna was first initiated by Rev. Fr. Xavier Raj Chinnappan in October 2014 with a small group of Tamil speaking Catholics from India and Srilanka. The Archdiocese of Vienna welcomed his initiative with warmth and happiness and supported him to cater to the spiritual needs of Tamil Catholics. He organised the liturgical services in St. Francis of Assisi Church, Mexicoplatz, Vienna, where he was serving as an assistant priest. He also served as a priest in charge of the Tamil Catholics, until he lived in Vienna. The Tamil Catholics in Vienna owe a great deal of gratitude to Fr. Xavier Raj Chinnappan and the archdiocese of Vienna for their great initiative and making us feel at home by giving us a lovely opportunity to praise and worship the Almighty in our mother tongue.

Since September 2016, Fr. Devadass Pankaraj has been serving as the priest in charge of Tamil Catholics in Vienna. At present the Tamil liturgical services take place in Rudolfsheim Parish church in Meiselstrasse 1, 1150 Vienna. The Tamil Holy Mass is celebrated on every third Sunday of the month at 1 pm and a fellowship gathering is organised after the Mass. Though the Tamil speaking community is very small, its spirituality is very rich. We are bound to express our profound sentiments of gratitude to Rev. Fr. Martin Rupprecht for his love, kindness, generosity and openness to other cultures and for wholeheartedly welcoming us to hold our liturgical services and fellowship gatherings in the Rudolfsheim Church premises. We are also very much grateful to our own non Tamil speaking Indian friends especially malayalam speaking friends, who live in and around Rudolfsheim for their solidarity and support.

Contact

Fr. Devadass Pankaraj

E-mail. Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!

 

                வியன்னா தமிழ் கத்தோலிக்க குழுமம்

அருட்பணி. சேவியர் ராஜ் சின்னப்பன் அவர்களுடைய முன்னெடுப்பால் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்து வியன்னாவில் வசிக்கும் சிறு எண்ணிக்கையிலான தமிழ் பேசும் கத்தோலிக்க மக்களைக்  கொண்டு அக்டோபர் 2014 ல் வியன்னா தமிழ் கத்தோலிக்க குழுமம் உருவாக்கப்பட்டது. அவருடைய முயற்சிகளை மகிழ்வோடு வரவேற்ற வியன்னா உயர் மறைமாவட்டம் தமிழ் வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு அவர் உதவித் தந்தையாகப்   பணியாற்றிய மெக்சிகோபிளாட்சில் ஏற்பாடு செய்து கொடுத்தது. வியன்னாவில் வசிக்கும் வரை அவரே இக்குழுமத்தின் பொறுப்புக் குருவாகவும் செயல்பட்டார். பல கல் தூரம் கடந்து வந்தாலும் தாய் மொழியில் நெஞ்சார இறைவனைப் புகழவும், வழிபடவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த அருட்பணி. சேவியர் ராஜ் அவர்களுக்கும் வியன்னா உயர் மறை மாவட்டத்திற்கும் தமிழ் கத்தோலிக்க குழுமம் நன்றிகடன் பட்டிருக்கிறது.  செப்டம்பர் 2016 ல் அருட்பணி. தேவதாஸ் பங்கராஜ் இக்குழுமத்தின் ஆன்மீக வழிகாட்டியாக பொறுப்பேற்றுக்கொண்டார். தற்பொழுது வியன்னா 15 வது மாவட்டம் மைசல்ஷ்ட்ராசே 1 ல் உள்ள ருடோல்ப்ஸ்ஹைம் பங்கு ஆலயத்தில் மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையன்று  மதியம் 1 மணிக்கு திருப்பலியும் அதன் பின்னர் தோழமை கூடுகையும் நடைபெறுகின்றன. சிறு குழுவாக இருந்தாலும் அதனுடைய ஆன்மீகச் செழுமை மிகப்பெரிது. திருப்பலி  நிறைவேற்ற இடம் தந்து கனிவோடும் அன்போடும் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லும் இந்த மாவட்டத்தின் வட்டார அதிபர் அருட்பணி. மார்டின் ருப்ரேக்ட் அவர்களுக்கு தமிழ் கத்தோலிக்க குழுமம் நன்றி நவில்கின்றது.  தோழமை உறவோடு திருப்பலியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் பிற மொழி பேசும் இந்திய நண்பர்களுக்கு குறிப்பாக கேரள உறவுகளுக்கும் நன்றி.