Wir bauen gerade für Sie um. Unsere Website hat ein facelift dringend nötig. Während der Umbauarbeiten kommt es immer wieder zu Einschränkungen in der Darstellung der Website, wofür wir um Verständnis ersuchen. Wir arbeiten mit Hochdruck daran, dass unsere Website zu Ostern mit einem neuen Erscheinungsbild wieder problemlos funktioniert. Vielen Dank für Ihr Verständnis und Ihre Geduld! |
“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக். 23:43)
இறுதி தீர்ப்பின் ஒரு முன்னோட்டம் கல்வாரியில் நடந்தேறுகின்றது. இறுதி தீர்ப்பின்போது அரியணையில் அமர்ந்து நீதி வழங்க வேண்டிய மானிட மகன் இதோ, கள்வர்களின் நடுவில் குற்றவாளியாகத் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கின்றார்.
தவக்காலம் என்பது அருளின் காலம், அன்பின் காலம், இரக்கத்தின் காலம். இந்தத் தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானித்து, நம் பாவ வாழ்விலிருந்து விடுபெற திருஅவை நம்மை அழைக்கின்றது. இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானிக்கும் போது, உண்மையில் அவர் சிலுவையில் அடைந்த வேதனைகளை, துன்பங்களை நாம் நினைவுக்கூருகிறோம். அந்த வகையில், இந்தத் தவக்காலத்தில் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசுவின் ஏழு வார்த்தைகளைப் பற்றி சிந்திப்போம்.
தவக்காலம் அருளின் காலம்; இரக்கத்தின் காலம்; அன்பின் காலம். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத் திரு அவையில் உயிர்ப்பு பெருவிழாவிற்கு முன்பாக 40 நாள் தயாரிப்பு காலமான தவக்காலம் அனுசரிக்கப்பட்டது. இந்த 40 நாள் தயாரிப்பு காலம், உரோமை கத்தோலிக்க திரு அவையில் ஏழாம் நூற்றாண்டில் இருந்து ஒரு சில மாறுபாடுகளோடு கடைபிடிக்கப்படுகிறது.
அன்பின் பாதை
திருச்சிலுவைப் பாதை தொடக்க செபம்
முதல்வர்: தந்தை மகன் தூய பெயராலே, ஆமென்!
எல்லோரும்: இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன்இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள்நினைவுகூர்கின்றோம். அவர்நடந்துசென்ற சிலுவையின்பாதையில் பின்சென்று நடந்திட. இறுதிவரை இயேசுவின் நாங்கள்வாழ மன்றாடுகின்றோம் மன்றாடுகின்றோம் மன்றாடுகின்றோம். ஆமென்!
தொடக்கச் சடங்குகள்
(குரு பீடத்திற்கு வந்து வணக்கம் செய்யும் போது, அனைவரும் எழுந்து நின்று வருகைப் பாடலைப் பாடுவோம்)
குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
வியன்னா தமிழ் கத்தோலிக்க குழுமம்
அருட்பணி. சேவியர் ராஜ் சின்னப்பன் அவர்களுடைய முன்னெடுப்பால் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்து வியன்னாவில் வசிக்கும் சிறு எண்ணிக்கையிலான தமிழ் பேசும் கத்தோலிக்க மக்களைக் கொண்டு அக்டோபர் 2014 ல் வியன்னா தமிழ் கத்தோலிக்க குழுமம் உருவாக்கப்பட்டது.